பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தளங்களில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பௌர்ணமி தோறும் 108 திருவிளக்கை பூஜை நடைபெற்று வருகிறது அந்த வகையில்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் இன்று வைகாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்துகொண்டு தீர்க்க சுமங்கலியாக இருக்க பிரார்த்தனை மேற்கொண்டனர்.
வைகாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உற்சவர் அங்காளம்மன் எழிலரசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
0 கருத்துகள்