ஆதிபராசக்தி... ஆதிமகாசக்தி...
சுடலையிலே காளி...
சூடத்திலே ஜோதி...
இடபாகம் நின்று நீ ஈசனை தான் காத்தாய்...
என் இடர் நீக்க வரவேண்டும் சுடர்விழியாளே...
பிடிகொழுக்கட்டையுனே நல்இளநீரும் நயமுடனே நாளும் நல்கிடுவேன் ...
நான்முகன் சோதரி சோதனை களைவாய்...
கேழ்வரகு கூழ் தன்னில் கேட்டவரமருளும் கேதார ஈஸ்வரியே...
ஊழ்வினை சூழாது காக்க உமாமகேஸ்வரி வரமருள்வாய்...
வேம்புடனே எந்தன் வேதனையை தீர்ப்பாய்
வேதத்தின் வித்தே வேதவல்லியானவளே...
கும்ப படையளுடனே கூடி வணங்கிடுவோம்...
இன்பம் அளித்திடவே ஈஸ்வரியே வாருமம்மா...
0 கருத்துகள்