Ad Code

Responsive Advertisement

ஆடி அமாவாசை குலதெய்வ வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?

முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யும் சூழல் இல்லாமல் போனாலும், 

சரியாக செய்யாமல் போனாலும், 

முறையாக செய்ய தெரியாமல் போனாலும் 

பித்ரு தோஷம் முதல் கிரக தோஷம் வரை அனைத்து வித தோஷங்களும் ஏற்படும்.

 இவை அனைத்தும் குலதெய்வ வழிபாட்டால் நீங்கும்.

 அதுவும் அமாவாசையில் வழிபாடு செய்யும் பட்சத்தில் பாவங்களும் நமது வம்சத்திற்கு ஏற்பட்ட சாபங்களும் இருளோடு இருளாக மறைந்து போகும்.

 தட்சணாயன காலம் துவங்குகிற ஆடி மாதத்தின் அமாவாசையில் குலதெய்வ வழிபாடு செய்ய,,, தொடரும் இடர் நீங்கும். 

எத்தனை கடவுள் வழிபாடு செய்தாலும் குலதெய்வ வழிபாடு என்பதே வம்சம் தழைக்க வாழ்வு சுபிட்சமாகும்.

 குலதெய்வம் தெரியாதவர்கள் மேல்மலையனூர் அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு ஆடி மாதம் தை மாதங்களில் வழிபாடு செய்யலாம். ஏனென்றால் அகிலம் பிறக்கும் முன்பு பிறந்த அங்காளம்மனே அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகிறாள் அவளே குலதெய்வங்களுக்கெல்லாம் மூல தெய்வமாக காட்சியளிக்கிறாள்.

 இவ்வாறு அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்று தட்சணாய காலம் துவங்கும் ஆடி மாதத்தில் வழிபாடு செய்வதனால் தொட்ட காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும், தடைபட்டு வந்த சுப காரியங்கள் விரைவில் நிறைவேறும், வாழ்வில் நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்பட்டு, தோஷங்கள் நிவர்த்தி ஆகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

 குலதெய்வ கோவில்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தவாறு குலதெய்வ வழிபாடு செய்து ஏதேனும் ஒரு ஏழைக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும் இவ்வாறு வழிபட குலதெய்வ கோவில் சென்று வந்த புண்ணியத்தை பெற முடியும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement