விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கங்கையம்மன் கோவிலில் நேற்று பருவத ராஜ குல வம்சத்தை சேர்ந்த பூசாரிகள் குடும்பத்தினர் சார்பாக கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.
நேற்று காலை கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து கங்கையம்மனுக்கு படையல் போட்டு ஆர்த்தி காண்பித்து கூழ்வார்த்தல் விழா சிறப்பாக நடைபெற்றது.
அதன் பிறகு அங்காளம்மன் கோவிலிருந்து கரகம் எடுத்தும், தீ சட்டி ஏந்தியும் மேல்மலையனூர் ஊர் பகுதி முழுக்க வலம் வந்து மீண்டும் திருக்கோயிலை வந்தடைந்தது. அம்மன் வேடமிட்டு நடனம் ஆடிய காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
0 கருத்துகள்