கற்பகமே உனையன்றி துணையாரம்மா-நீயே கதி எனப்போற்றும் எனைக் கண்பாரம்மா-அம்மா.
அற்புதம் எல்லாம் நிகழ்த்தும் அருள்திறம் உடையவளே ஆனந்த வாழ்வு தன்னை அன்பர்க்கு அளிப்பவளே. அலைகடல் ஓரத்திலே அமைந்த மயிலையிலே கலைவடிவாய் திகழும் நின் திருக்கோயிலிலே சிலை வடிவாய் நின்று உலகேழும் காப்பவளே செம்பவளமேனி வண்ணன் மகிழும் உமையவளே.
0 கருத்துகள்