Ad Code

Responsive Advertisement

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு-ஜகத் ஜனனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அங்காளம்மன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்


வைகாசி அமாவாசையான வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர்   அங்காளம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் உற்சவர் அங்காளம்மன் ஜகத்ஜனனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்


நள்ளிரவு 11.00 மணி அளவில் ஜகத் ஜனனி அலங்காரத்தில் உள்ள உற்சவர் அங்காளம்மன் வடக்கு வாயில் வழியாக பூசாரியில் தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். அப்போது பக்தி பரவசமடைந்த பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா என பக்தி பரவசமடைந்து சில பக்தர்கள் நடனமும் ஆடினர். உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ‌ பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்


பக்தர்களின் பாதுகாப்பிற்காக    250 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement