விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் 16.08.2023 புதன்கிழமை அன்று இரவு ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. ஊஞ்சல் உற்சவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி ஊஞ்சல் உற்சவத்தை காண திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஊஞ்சல் மண்டபம் அருகே தடுப்பு கட்டைகள் அமைத்தும், அதே போன்று சுடுகாடு அருகே அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடம் பகுதியில் இருந்து பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை காணும் வகையில் சிறப்பு ஏற்படும்,அதே போல் ஊஞ்சல் உற்சவத்தை காண வரும் பக்தர்கள் வள்ளலார் கோவில் முதல் பெரிய தெரு வழியாக கோவில் வரை ஒரு வழி பாதையாகவும், ஊஞ்சல் உற்சவம் முடிந்த பின் ஒத்தவாடை தெரு வழியாக வள்ளலார் கோவிலில் சென்றடையும் வகையிலும், அதேபோன்று கிழக்கு பக்கம் புதிதாக அமைக்கப்பட்ட சாலை வழியாகவும் வள்ளலார் கோவிலை பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்