விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் அமாவாசை தோறும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அங்காளம்மன்னை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாத அமாவாசை தினத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்த நிலையில், உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்க பணம்,தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் , விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம் , திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட அரங்காவலர்கள்
முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பக்தர்கள் உண்டியலில் நேர்த்திக் கடனாக செலுத்திய ரொக்க பணம், தங்கம் மற்றும் வெள்ளி இனங்கள் எண்ணப்பட்டன.
வளத்தி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கை முடிவில் 94 லட்சத்து 42 ஆயிரத்து 622 ரூபாய் பணமும்,315 கிராம் தங்கமும்,1110 கிராம் வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்