கணேச ஜனனி
பிள்ளை கனி கொண்டு
எல்லை மீதமர்ந்து
தொல்லை நீக்கும்
எல்லாம் வல்ல அங்காளி...
நான் என்னை மறந்து
உன்னை அடைந்தேன்
என் தாயி...
அகமும் ஜகமும் அனைத்தும் ஆனாய்
கணேச ஜனனி...
முந்தி நிற்கும் தொந்தி வயிற்றன்
பிந்தி நிற்கும் ஆறுமுகனும்
என்னைக் காக்க அனுப்பி வைப்பாய்...
கணேஷ ஜனனி
கவலைகள் நீக்கி
காலங்கள் மாற்றி
காத்தருள்வாய்...
கணேஷ ஜனனி
0 கருத்துகள்