தாயாக நீயாக ...
தானாக நானாக உன்னை தேடி வந்தேனே...
சேயாக துணை சேர நான் தீராத குணம் கொண்டேன்...
ஆறாத நோயாக என்னுள்ளே நீ வந்தாய்...
அங்காள ஈஸ்வரியே ஆதி பரமேஸ்வரியே...
அலங்காரம் நான் செய்ய அழைத்தேனே உன்னை...
ஆலயம் விட்டு சூலமும் விட்டு வருவாய் நீயே...
சுடுகாடு வேண்டாம் சுந்தரியே... - என்
நடுவீடு வருவாய் தவழ்ந்து நீயே...
ஒன்பது நாளும் வருவாய் ஒய்யாரமாய்...
செங்காந்தள் மலர் சூடி சிங்கார பொட்டு இட்டு
நான் கொண்ட செல்வமே நடமாடும் தெய்வமே...
அகிலத்தின் நாயகி நவராத்திரி வந்ததே...
நான் அழைக்கின்றேன் வருவாயே...
ஆரணி பட்டுடுத்தி
தோரணை இட்டு நீ
பேரணி காண வருவாயே...
தாயாக நீயாக சேயாக உன்னை காண
சேர்ந்ததே இக்கூட்டம் திக்கெட்டும்...
தித்திக்கும் தீஞ்சுவையே
எத்திக்கும் மணம் வீசும்
ஏகாந்த ரூபிணி எழில் முக நாயகி
ஆருடம் நீ கூற மானுடம் வாழுதே
ஆனந்த ராகமாய் அங்காளி வருவாயே....
0 கருத்துகள்