சின்ன சின்ன பாதம் கொண்டு
சிங்கார வேடமிட்டு
கை நிறைய மருதாணி
இரத்தினக்கல் தோடோடு
பாவாடை சட்டையுமே
செண்பக நிறத்தவளே
ஏற்பாடு நான் செய்தேன்
பார்வதியின் புத்திரியே
அசோக சுந்தரியே ...
பக்தர்கள் மனமகிழ் பாலா திரிபுரசுந்தரியே
நிம்மதி அருளிடம் நிரந்தரியே
சௌபாக்கியம் அளித்திடும் சவுந்தரியே
தைத்யனை அழித்த தைரியவதி....
தாராள குணம் கொண்ட தாட்சேனியே
லலிதாவின் மகளே திரிபுரசுந்தரி...
இலட்சணமாய் வந்தருள்வாய் பாலா திரிபுரசுந்தரி
0 கருத்துகள்