ஆடி மாதம் என்றாலே அம்மன் திருத்தலங்களில் கொண்டாட்டம் தான் குறிப்பாக மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தில் சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம். அந்த வகையில் 22.07.2023 ஆடி 06 ஆம் தேதி ஆடி பூரம் சனிக்கிழைமை அன்று 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது.
இதற்கு தேவையான வளையல்களை பக்தர்கள் வாங்கி கொடுப்பது வழங்கம். சென்னை பகுதியை சேர்ந்த தேன்மொழி குடும்பத்தினர் முதல் கட்டமாக 30 ஆயிரம் வளையல்களை வாங்கி கொடுத்து உள்ளனர். பெண்கள் வளையல் அணிவது போல் அம்மன் வளையல் அணியும் போது அவளின் மகிழ்ச்சி சொல்லவே வார்த்தை இல்லை. இந்த வளையல் வாங்கி கொடுத்து தேன்மொழி குடும்பத்தினரும், இதை பிரசாதமாக பெறப்போகும் பக்தர்களும் அனைத்து செல்வங்களும் பெற்று அங்காளம்மன் அருளால் வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்