விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி மாத அமாவாசை திருவிழா வருகிற 17.07.2023 அன்று நடைபெற உள்ளது. ஆடி மாத அமாவாசை திருவிழா காலங்களில் திருக்கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
17/7/2023 அமாவாசை தினத்தன்று மேல்மலையனூருக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையங்கள் வரை மட்டுமே இயக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து வள்ளலார் மடம் வரை மினி பஸ் மட்டுமே இயக்கப்படும் அமாவாசை தினத்தன்று இரவு 9 மணிக்கு மேல் வரும் வாகனங்கள் மேல்மலையனூர் எல்லைக்குள் அனுமதிக்காமல் வேலூர் காஞ்சிபுரம் மார்க்கமாக வரும் வாகனங்கள் தேவனூர் கூட்டு சாலையிலும் திருவண்ணாமலையில் இருந்து வரும் வாகனங்கள் அவலூர்பேட்டை சந்திப்பிலும் சேத்துப்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் சங்கிலிகுப்பம் வாகனம் நிறுத்தும் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேல்மலையனூர் ஊருக்குள் வருகை தரும் பக்தர்கள் திருக்கோயிலுக்கு நெரிசல் இன்று வந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வடக்கு வாயில் மேல்மலையனூர்
0 கருத்துகள்